Church History
About our Church
"கர்த்தரைக் கெம்பீரமாய்ப்பாடி, நம்முடைய இட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்."
கர்த்தரின் பெரிதான கிருபையால் 1899-ம் ஆண்டு ஒரு ஒய்வுநாளில் திரு.சி.அருமைநாயகம், திரு.யோவான், திரு.தானியேல் என்பவர்களால் 20 பிள்ளைகளை கொண்ட ஒய்வுநாள் பாடசாலை ஒன்று இங்கே ஆரம்பிக்கப்பட்டது. சில நாட்களில் இது ஒரு பள்ளிக்கூடமாக விரிவடைந்தது. இப்பள்ளியில் முதன் முதலாக திரு. பேரின்பம் என்பவர் 1 ரூபாய் ஊதியம் பெற்று உழைத்து வந்தார். இப்பள்ளியில் வளர்ச்சியின் அறிகுறிகளைக் கண்ட Rev.ஏசுவடியான் போதகரும், திரு.பால்டேனியல் அவர்களும் இந்த பள்ளிக்கூடத்தை பெரிதாக்க விரும்பினர். இதற்காக திரு.அருமைநாயகம், திரு.தேவசகாயம் ஆகியோர்கள் இலவசமாக பூமி கொடுத்தார்கள். அதிலிருந்தே ஒய்வுநாள் பாடசாலை சபையாக வளர ஆரம்பித்தது.
1900-ம் ஆண்டில் கனம் பண்டிதர் டதி ஐயரால் இங்குள்ள பள்ளிக்கூடம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து திரு.பால்டேனியல் அவர்களின் முயற்சியால் மீண்டும் பள்ளிக்கூடம் பெரிதாக்கப்பட்டது. 1923-ம் ஆண்டு பெப்ரவரி 15-ம் தேதி முதல் புதன் இரவு ஜெபம் இங்கு ஆரம்பமானது. அப்பொழுது பலருடைய நன்கொடையால் ஆலயத்திற்கென்று மணி ஒன்றும் வாங்கப்பட்டது. அப்பொழுது சபை ஊழியராக இருந்த திரு.C.ராஜரெத்தினம் உபதேசியாரால் பள்ளிக்கூடம் பெரிதாக்கப்பட்டு ஆலயமாகவும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் திரு.பால் உபதேசியாரும், திரு.மால்ட் சுவிசேஷகரும் தொடந்து சிறப்பான பணிகளை ஆற்றினர். அப்போதிலிருந்து காலை, மாலை ஆராதனை ஆரம்பமாயின. தொடர்ந்து திரு.ஏசா சுவிசேஷகர் அவர்கள் சிறப்பான பணி புரிந்தார். 19-03-1967 முதல் நாகர்கோவில் ஹோம் சர்ச் கீழ் ஓர் தனிச்சபை கமிற்றி செயல்பட ஆரம்பித்தது. தொடர்ந்து திரு.ஜெபமணி சுவிசேஷகர் ஊழியராக பணிபுரிந்தார்.
1967-ல் Rev.சுவாமிதாஸ் சபை ஊழியராக பொறுப்பேற்றார். 01-09-1972 முதல் திரு.Y.ஏசுதங்கம் அவர்களும் தொடர்ந்து திரு.ராஜையா என்பவர்களும் இங்கு ஊழியம் செய்தனர். அப்போது 7 டீக்கன்மாரைக் கொண்ட சபைக் கமிற்றி தனித்து செயல்படத் துவங்கியது 1975-ம் ஆண்டு முதல் திரு.சாமுவேல் சுவிசேஷகர் ஊழியராகப் பொறுப்பேற்றார். 1976-ம் ஆண்டு Rev. அருள்தம்பி ஹாரிஸ் சபை ஊழியராக நியமனம் பெற்று போதகர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். அப்போதிலிருந்து மாதத்தில் முதல் வெள்ளி தோறும் திருச்சபையார் கூட்டம் நடத்தும் பழக்கம் ஆரம்பானது. அப்பொழுது சபையாரின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் புதிய ஆலயம் கட்ட வேண்டுமென்ற எண்ணம் உருவாயிற்று. இதற்காக டிஸ்லறி வளாகத்தில் 25 சென்று பூமி வாங்க வேண்டுமென்று தீர்மானம் செய்யப்பட்டது. 14-09-1977-ல் டிஸ்லறி வளாக்கத்தில் 25 சென்று மனை வாங்கப்பட்டு 70 அடி நீளம், 35 அடி வீதியுள்ள இந்த ஆலயம் கட்டுவதற்கு 04-01-1978 அன்று பேராயர்.கொ.செல்வமணி,M.A.,B D.,S.T.M. அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது, இந்நாட்களில் Rev.S.D.டதி,B.A.,B.D. அவர்கள் கொடுத்த நல்லாலோசனையும் ஒத்துழைப்பும் பாராட்டுதற்குரியது.
1978-ம் ஆண்டு பெப்ரவரி திங்கள் 19-ம் நாள் புதுக்குடி சபை பாஸ்ட்ரேட் அந்தஸ்தக்கு உயர்த்தப்பட்டது. 1981-ம் ஆண்டு முதல் Rev.M.றசல் வேதராஜ்,L.Th அவர்கள் போதகராக பொறுப்பேற்று புதிய ஆலய கட்டுமான பணிகளிலும், ஊக்கமான திட்டங்களாலும், டீக்கன்மாரது ஓயா உழைப்பாலும், சபை மக்களது பூரணமான ஒத்துழைப்பாலும் புதிய ஆலயம் கட்டப்பட்டு 15-08-1984 அன்று பேராயர் Rt.Rev.G.கிறிஸ்துதாஸ்,M.A.,B.D அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15-ம் நாளை ஆலய பிரதிஷ்டை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறு பொது கன்வென்ஷனும் நடத்தப்பட்டு வருகிறது.
பின்னர் பழைய ஆலயத்தை போதகர் இல்லமாக மாற்றி Rev.செல்வராஜ்,B.Th. அவர்கள் வசித்து வந்தார்கள். அது ஓடு கட்டிடம் என்பதால் மழை காலங்களில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே சபை கமிட்டியாக கஸ்பா சபை கமிட்டியிடம் போதகர் இல்லம் கட்ட அனுமதி பெற்று புதிய போதகர் இல்லம் கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டு 26-09-2005 அன்று கஸ்பா சபை செயலாளர் திரு.E.G.M.ஜாண்சன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் புதிய போதகர் இல்லம் கட்டி முடிக்கப்பட்டு 16-04-2006 அன்று சேகரத்து போதகர்Rev.A.ஜோஸ்லின் சந்திரகுமார்,M.A,M.Th. முன்னிலையில் பேராயர் Rt.Rev.Dr.தேவகடாட்சம்,M.A.,B.D.,M.Th.,D.D. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் ஆலயத்தின் எல்லா ஆராதனைகளும் ஒழுங்காக நடைப்பெற்றது. Rev.சாமுவேல்,B.A.,B.D. அவர்கள் பணி காலத்தில் வரும் சபை மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த காரணத்தினால் ஆலயத்தை விரிவாக்கம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆலயத்தின் பின் பகுதியில் இருந்த இடத்தில் விரிவாக்கம் செய்வதற்கு 25-07-2010 அன்று ஞாயிறு காலை பேராயர் Rt.Rev.Dr.தேவகடாட்சம்,M.A.,B.D.,M.Th.,D.D. அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. விரிவாக்க பணியை தொடர்ந்து புதிய ஆல்டர் கட்டி முடிக்கப்பட்டு Rev.ராபர்ட் பெனடிட்,M.D.,B.D.,M.Th. பணிகாலத்தில் ஆலய பராமரிப்பு பணியும் முடிக்கப்பட்டு 25-12-2012 அன்று மாடரேட்டர் Rt.Rev.Dr.தேவகடாட்சம்,M.A.,B.D.,M.Th.,D.D. அவர்களால் திறந்து வைக்கப்பட்டு ஆலய ஆராதனை தொடந்து நடத்தப்பட்டது. பின்னர் ஆலயத்தின் இடது பக்கம் விரிவாக்கம், புதிய ஆலய அலுவலகம், ஆலய முன் பகுதி தரை தளம், புதிய காம்பவுண்ட் சுவர் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு 01-07-2018 ஞாயிறு காலை ஆராதனையில் Rev.Dr.ஜெசின்,M.A.,B.D.,M.Th. அவர்கள் தலைமையில் Rev.R.டைட்ஸ் ஞானறாபி,M.A.,M.Phil.,B.D., அவர்கள் ஜெபித்து Rev.S.டார்வின்,B.D. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் இடது பக்கமும் விரிவுப்படுத்தபட்டு 10-02-2019 பொறுப்பு பேராயர் Rt. Rev.Basker Ninan Fenn அவர்களால் ஜெபித்து திறந்து வைக்கப்பட்டது. பின்னர் Rev.கிறிஸ்டோபர் பாபுராஜ் சிறப்பாக பணியாற்றினார்கள். அதை தொடர்ந்து Rev.Dr.T.ராஜன் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
மிஷனெரி பணிகள்
கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்.
"அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;ஆதலால், அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்."
"நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்."
"யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்."
என்ற வேத வாக்கியங்களின் படி சபை கமிட்டியாக ஆலோசித்து சபை மக்கள் ஆதரவோடு மிஷினெரிகளை தாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. முதலில் 18-06-1986 அன்று ஞாயிறு காலை ஆராதனையில் நடந்த மிஷனெரி அற்பண ஆராதனையில் IEM மிஷனெரியாக திருமதி.மலர் ஜஸ்டஸ் அவர்கள் ஆந்திரா பகுதிக்கு அனுப்பபட்டார்கள். பின்னர் தொடர்ச்சியாக இதுவரை 32 மிஷனெரிகள் அற்பணம் செய்யப்பட்டு சபை கமிட்டி, சபை மக்களின் ஒத்துழைப்புயோடும், உதாரத்துவமான காணிக்கைகளாலும் தாங்கப்பட்டு வருகிறார்கள். சபை மக்களின் மிஷனெரி காணிக்கைகள் மூலமாக 14 மிஷனெரிகளும் சபை குடும்பங்களால் 16 மிஷனெரிகளும், பெண்கள் சங்கம் சார்பாக 2 மிஷனெரிகளும் தாங்கப்பட்டு வருகிறார்கள்.
புதுக்குடி CSI சபை தாங்கும் மிஷனெரி ஸ்தாபனங்கள்
- DMPB (Diocesan Missionary Prayer Band) – 7
- GEMS (Gospel Echoing Missionary Society) – 4
- FMBP (Friends Missionary Prayer Band) – 3
- IEM (Indian Evangelical Mission) – 3
- HMS (Home Missionary Society) – 2
- CEF (Child Evangelism Fellowship) – 2
- YFC (Dharmapuri Youth For Christ) – 1
- BYM (Blessing Youth Mission) – 1
- NMS (The National Missionary Society Of India) – 1
- ICGM (India Church Growth Mission) – 1
- MTB (Mission To The Blind) – 1
- CHM (Christ Harvest Mission) – 1
- FEF (Fellowship Evangelical Friends) – 1
- NMMM (New Man Missionary Ministries) – 1
- CGMM (Church Growth Missionary Movement) – 1
சபை கமிட்டியின் தொலைநோக்கு பார்வையாக மலை கிராமத்தில் ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்ற வாஞ்சையோடு DMPB ஸ்தாபனத்தை அனுகி கேட்ட போது சேராபட்டு வட்டாரத்தில் வலசமலை என்றும் இடத்தில் ஆலயம் கட்ட அனுமதித்தார்கள். திரு. R. பிரவின் ரெத்தினம் அவர்கள் குடும்பம் தந்த காணிக்கையால் ஆலயம் 10-02-2020 அன்று Rev.கிறிஸ்டோபர் பாபுராஜ்,M.A.,B.D. அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 13-09-2021 அன்று புதுக்குடி சபை போதகர் Rev.Dr.T.ராஜன் அவர்கள் தலைமையில் DMBP பொதுசெயலாளர் Rev.டேவிட் றாபி ஜேக்கப்,M.A.,B.D. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஆலயத்தில் மற்ற தேவையான அனைத்து பொருட்களும் சபையின் சில குடும்பங்கள் சார்பாக வாங்கி தரப்பட்டு சபையில் ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
சபை கமிட்டி, சபை மக்கள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 13 ம் தேதி வலசமலை ஆலயத்தில் போதகரோடு சென்று சபை நாள் ஆராதனை நடத்தப்பட்டு வருகிறது.
மிஷனெரி பணிகளில் புதுக்குடி CSI சபை மக்கள் மேலும் பல மிஷனெரிகளை தாங்கவும் அதற்கான முயற்சிகளில் சபை கமிட்டி செயல்படவும் ஜெபிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
Service Timings
Worship of Arunodaya | : | Morning 5.00 AM |
Sunday Morning Service | : | Morning 8.00 AM |
Sunday Evening Service | : | Evening 6.00 PM |
Wednesday Service | : | Evening 6.00 PM |
Friday Prayer Meeting | : | Friday 6.00 PM |
Fasting Prayer | : | 3rd Saturday Morning 10.00 AM |
Sunday School | : | Sunday 10.30 AM |
Christian Endeavor | : | Sunday 11.30 AM |
Men's Fellowship | : | Sunday 12.30 PM |
Women's Fellowship | : | Sunday 4.30 PM |
Families
Members
Baptized
Confirmed
Verse
Bible Verse of the Day
Events
Upcoming Events Of Our Church
Committee
Our Committee
Revd Dr. Rajan T.
PresbyterMr Jaya Paul Y.
SecretaryMr Johnson S.
Treasurer & D.C. MemberMr Christopher Nayagam Y.
Accountant & D.C. MemberMrs Mary Anna Kumari Xavier D.
Committee MemberMrs Paulin Annabel T.
Committee MemberMr Ruban Paulraj G.
Committee MemberMr Robinson D.
Committee MemberMrs Catherine Amirtha Stella P.
Committee MemberMr Monickam Vargees M.
Committee MemberMr Prakash Thassiah M.
Committee MemberPrayer Request
Post Your Prayer Request
Gallery
Check Our Gallery
Contact
Contact Us
Revd Dr. Rajan T.
Presbyter
+91 8610369356
Mr Jaya Paul Y.
Secretary
+91 9894174817
Mr Johnson S.
Treasurer
+91 9443451442
Mr Christopher Nayagam Y.
Accountant
+91 9442382577
Donation
Give, and it will be given to you.
- Luke 6:38Please inform your name and the type of the offering after remittance to bellow church account.
Account Name | : | Industrial Development Bank of India (IDBI) |
---|---|---|
Account Number | : | 1903104000126380 |
Branch | : | Vadassery |
IFSC Code | : | IBKL0001903 |